Click hereNOTIFICATION 2021
Thursday, 9 September 2021
Wednesday, 4 August 2021
படம் பார்த்து கவிதை சொல் - Mohammed Harish Akmal, Anthiyur.
வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை
திறமையோடு சிறிது பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் வறுமை என்பதே வராது...
இதை உணர்ந்தவர் வாழ்வில் துயரம் என்பதே இருக்காது
- Mohammed Harish Akmal,
Anthiyur , Erode
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons
Tuesday, 3 August 2021
படம் பார்த்து கவிதை சொல் - இரா.காயத்ரி , தருமபுரி மாவட்டம்.
வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை
ஒரு முழம் பூ விற்க ..
ஓயாமல் காத்திருக்க..
ஒருவரும் வரவில்லையே
கொரனாவின் ஊரடங்கால்...
பள்ளிக்கூடம் மூடியிருக்கு..
படிக்க என் பிள்ளைக்கு
ஆசையிருக்கு
என் நிழலில் பாடம் படிச்சிருக்க..
எப்ப சாமி பள்ளிக்கூடம்
திறக்கும் ?
- இரா.காயத்ரி,
தருமபுரி மாவட்டம்.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons
படம் பார்த்து கவிதை சொல் - Parameshwaran , Namakkal
வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை-1
புத்தகம் பிடித்த பூச்சரமே! நான் தவமிருந்து வாங்கி வந்த வரமே, சாலையில் நீ படி நானிருப்பேன் நிழலாக, நாளை நீ வாழ்வில் முன்னேறு நானிருப்பேன் மரமாக,,,
கவிதை-2
கல்விக்கு போராடுது மலர் ஒன்று, அதற்காக வெயிலில் வாடுது வேர் இன்று...
- Parameshwaran, Drawing Master,
Namakkal.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons
படம் பார்த்து கவிதை சொல் - Suryaprakash ,Bhavani (TK) , Erode.
வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை
இறந்தகாலத்தை எண்ணி...
நிகழ்காலத்தில் வருந்தி கொண்டு இருக்கும் தாய்க்கு தெரியவில்லை...
பின்னே தனது எதிர்காலம் கல்வி என்னும் வளர்ச்சி பாதயில் போகிறது என்று...
- Suryaprakash , Bhavani (TK) , Erode.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons
படம் பார்த்து கவிதை சொல் - Dharani , Bhavani (TK) , Erode.
வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை
வேகாத
வெயிலிலே
வியாபாரம்
செய்யயில
வேதனைதான்
நெஞ்சினிலே...
தனக்கோ
தன் பிள்ளைக்கோ
தலைவாரி
பூச்சூடும்
வேளைதான்
வந்திடுமோ?
நாளும் தான்
கூடிடுமோ?
பூச்சரம்தான்
விக்கலியே
பூத்த வேர்வையும்
காயலியே...
வேதனைதான்
தீரலயே ...
மகராசி மகளுந்தான்
மாற்றந்தான் தருவானு
மனசாரப் பாடுபடும்
மாதரசி நீதானோ ?
கடந்து போகும் காரெல்லாம்
கருணை வச்சு
வாங்கினா
கந்துக் கடன அடைச்ச பின்னே
கஞ்சித் தண்ணி
குடிக்கலானு
கனவு காணும்
தாயே...
காத்திருந்து பாரம்மா...
காரேறி உன் மகளும்
பார் போற்ற வந்திடுவா...
பாரம் இறக்கி
வைச்சிடுவா...
படிக்கும் புள்ள முகம் பார்த்து
பசி அடக்கிக்
கொள்ளம்மா ...
- Dharani , Bhavani (TK) , Erode .
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons
படம் பார்த்து கவிதை சொல் - Yogiraj , Chennai
வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
****
கவிதை
முல்லைக்காக மல்லிகை விற்கும் அம்மா...!
குடிகாரனக் கட்டியதால
கட்டிய தாலியும் போயிருச்சு
கதறி அழவும் முடியல
கண்ணீர் விடவும் முடியல
மகளைப் பெத்த நானோ
மனசொடஞ்சு போனே(ன்)
வாரிச கர சேர்க்க
வாழ்ந்து தானே ஆகனு(ம்)
கந்து வட்டி வாங்கியாச்சு(ம்) - மகள
கலெக்டருக்கு படிக்க வைப்பே(ன்)
- Yogiraj , Chennai
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons
Subscribe to:
Comments (Atom)
TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி
Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி அ - அழகு , சுட்டெழுத்து, எட்டு. ஆ - பசு , ஆன்மா, ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு, பறக்கும் பூச்சி....
-
திருக்குறள் பால் : பொருட்பால் இயல்: நட்பியல் அதிகாரம்: 94 - சூது 931 - வேண்டற்க வென்றிடனும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழு...
-
If the roots of the equation q 2 x 2 + p 2 x + r2 = 0 are the squares of the roots of the equation q x 2 + p x + r = 0 , are the squares ...
-
Sathiskumar Education - Social Media Links WhatsApp Group - Click here Threads - click here