Tuesday 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Dharani , Bhavani (TK) , Erode.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை

வேகாத 
    வெயிலிலே
வியாபாரம் 
     செய்யயில
வேதனைதான்       
     நெஞ்சினிலே...
தனக்கோ
     தன் பிள்ளைக்கோ
தலைவாரி
     பூச்சூடும்
வேளைதான் 
     வந்திடுமோ?
நாளும் தான்
     கூடிடுமோ?
பூச்சரம்தான்   
     விக்கலியே 
பூத்த வேர்வையும்
      காயலியே...
வேதனைதான் 
       தீரலயே ...
மகராசி மகளுந்தான்
மாற்றந்தான் தருவானு
மனசாரப் பாடுபடும்
மாதரசி நீதானோ ?
கடந்து போகும் காரெல்லாம்
கருணை வச்சு
வாங்கினா
கந்துக் கடன அடைச்ச பின்னே
கஞ்சித் தண்ணி
குடிக்கலானு
கனவு காணும்
தாயே...
காத்திருந்து பாரம்மா... 
காரேறி உன் மகளும்
பார் போற்ற வந்திடுவா...
பாரம் இறக்கி 
வைச்சிடுவா...
படிக்கும் புள்ள முகம் பார்த்து
பசி அடக்கிக் 
கொள்ளம்மா ...

- Dharani , Bhavani (TK) , Erode .
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...