Monday 19 December 2022

மழலை கதைகள் - சிங்கமும் பசுக்களும்

சிங்கமும் பசுக்களும்

[ கதையை ஆடியோவாக கேட்க கிளிக்
]

ஒரு கிராமத்தில் உள்ள ஏராளமான பசுக்கள் , அருகே‌இருந்த காட்டுக்குள் சென்று மேய்ந்து வருவது வழக்கம்.

அந்த காட்டிலோ பொல்லாத சிங்கம் ஒன்று திரிந்தது.
தனியாக மேயும் பசுவை சாமர்த்தியமாக அடித்துக்கொன்று தின்பது அந்த சிங்கத்திற்கு பழக்கமாகவே ஆகிவிட்டது.

 என்ன செய்வது என்று தெரியாத பசுக்கள் ஒன்றின் பின் ஒன்றாக சிங்கத்துக்கு பலியாகிக் கொண்டிருந்தன.

 ஒரு நாள் பசுக்கள் எல்லாம் ஒன்று கூடி கலந்து ஆலோசிக்க துவங்கின அப்பொழுது புத்திசாலி பசு ஒன்று "நண்பர்களே நாம் தனித்தனியாக மேய்வதால் தான் சிங்கம் நம்மை அடித்துக் கொள்கிறது நாம் இனிமேல் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக மேய்வோம் " என்று கூறியது.

 அன்றிலிருந்து பசுக்கள் ஒற்றுமையாகவே மேயத் துவங்கின...

 என்ன ஆச்சரியம் பசுக்கள் மேயும் அந்த திசைக்கு சிங்கம் வருவதே இல்லை.

 இந்த கதையிலிருந்து நமக்கு கிடைக்கும் நீதி ஒற்றுமையை பலம்


- Sathiskumar Education


// Story from Internet - Education Purpose only//

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...