Thursday 3 November 2022

இன்றைய செய்திகள் - 02-11-2022

இன்றைய செய்திகள்

02.11.22

* சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்.

* மழையால் பாதிப்பு: நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

* சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி.

* குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் வரை அனுமதி அளித்ததே விபத்துக்கு காரணம்.

* சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம்.

* சோமாலியாவில் 120 பேர் பலியான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி.

* மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி: சென்னை அணி 'சாம்பியன்'.

* சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் இளம்பரிதி முதலிடம்.

* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்

-: Source: Internet 

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...