Thursday, 13 October 2022

சொந்த இடம்

சொந்த இடம்
அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 

ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 

அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 

அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 

ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.

// Content from Facebook 

Wednesday, 12 October 2022

வாழ்க்கையே இனி நற்திசையாகும்

வாழ்க்கையே இனி நற்திசையாகும்

பெரும்பாலோரின் மனதிற்குள் ஒரு மிருகக்குணம் 24 மணி நேரமும் விழித்துக் கொண்டே இருக்கிறது.

 வாய்ப்பு வருகிற போது தன் குணத்தை காட்டுகிறது.  அப்படிப்பட்ட குணத்தோடு ஒருவன் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தான். அவன் பிரச்சனை மிக எளிதானது, 
 யாரும் தனக்கு நம்பிக்கையானவர்களாக இல்லை எல்லோரும் தனக்கு மட்டும் தேடி வந்து துரோகம் செய்வதாக எண்ணினான். அப்படிப்பட்ட துரோகிகளை பழிக்குப் பழி வாங்காவிட்டால் தன்னை மிகவும் தகுதி குறைவாக உலகம் எடை போடும் என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டான்.

பிறரின் சின்ன சின்ன காரியங்களை கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கினான்.

 வார்த்தைகளால் பிறரை பதம் பார்த்தான் உறவு கூட்டம் உதறியெறிய நண்பர் கூட்டம் தூர விலக்கியது.
 யாரையேனும் சபித்துக் கொண்டே இருந்தான் எல்லோரும் தன்னையும் சபிப்பதாக எண்ணினான்.

மனம் குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் காப்பாற்ற வருகிற துருப்பு கூட மரணத்தின் முகவரியை பெற்றிருப்பதாகவே என்ன தோன்றும் ! அப்படித்தான் அவனையும் அந்த விஷக்கொடி பற்றிப் படர்ந்து மன அமைதி கெடுத்தது.

கவலைகளை சேமித்து வைக்கிற குப்பைத்தொட்டியாக அவனும் அவன் மனதும் மாறின.

அவனை ஒரு துறவியிடம் அழைத்துச் சென்றனர் ;
எந்த மருந்தும் இல்லாமல் மூன்று நாட்களில் வியாதி குணமடையும் என துறவி கூற , அவனின் குணம் தலைதோக்கியது .

தன்னிடமிருந்து பொருளை பிடுங்கத் துறவி போடுகிற வேடம் என்று பிதற்றினான்.

எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம்....

 நீ திரும்புகிற போது நானே உனக்கு பணம் தருகிறேன்....

ஒரே ஒரு நிபந்தனை உண்டு என்றார்...! துறவி.

'என்ன ? வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்... அதுதானே ?  " 
என்றான் இளக்காரமாக ...

" நீ யாரையும் நம்பாமல் இருக்க காரணம் எத்தனையோ இருக்கலாம் ....

அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை ...

உனக்கு மூணு நாட்கள் மட்டுமே இங்கு வேலை தரப்படும் முடிவில் நோய் நோய் குணமாகும் .

நோய் குணமாக விட்டால் பணமாவது வரவாகும் என்ன சொல்கிறாய் ?

 மனதிற்குள் கருதிக்கொண்டான் " தன்னை வஞ்சித்து பின் அசம்பாவிதம் ஏதும் இருந்தால் முதலில் கொளுத்த வேண்டியது இந்த துறவியைத்தான்..." 

முதல் நாள்,
வேலைகளை பல்வேறு சீடர்களுக்கு பகிர்ந்து அளித்தார் அவனுக்கு கூரை வேயும் பணியை மட்டுமே அளித்தார்.

 ஒரு நாள் ஒரு பொட்டலத்தை வழங்கி இதில் பாதியை சாப்பிட்டுவிட்டு மீதியை நான் கேட்கிற பொழுது கொடு என்றால் முதல் நாள் வாங்கவில்லை...

 இரண்டாவது நாள் உணவுப் பொட்டலத்திலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது..

 துறவி அதை பற்றி கேட்கவே இல்லை..

இதை வைத்திருக்க வேண்டுமா ? 
என யோசித்தான்.

மூன்றாவது நாள் துறவியின் முற்றம் கூடியது..  அவனிடம் " எங்கே உணவுப் பொட்டலம் ? என்றார்..."

 அவனும் அதற்கு...

 அது ..... அது.... எப்படி வைத்திருக்க முடியும் ...?

அதை அப்பொழுதே தூக்கி எறிந்து விட்டேன் என்றான்...

"இப்போது புரிந்ததா கவலைகளும்,  குழப்பங்களும் அன்றன்றைக்கே தூக்கி எறியப்பட வேண்டியவை....
 சேர்த்து வைத்தால் வியாதிகளின் விளைச்சல் நிலம் ஆகி விடுவோம் நாம்.."

 என்றால் துறவி..

 அவர் தந்த விளக்கம் சிறியதுதான். ஆனால் சிந்திக்க வேண்டியது..

 மூன்றாவது நாள் வெளியேறியவனுக்கு புது திசை காத்திருந்தது

"கவலைகள் பறவைகளை போன்றது அவை உங்களுக்குள் கூடு கட்டும் முன், அவைகளை உங்களைத் தாண்டி பறக்க அனுமதியுங்கள் ! ! ! "

- மரு.ஜ.கோகிலப்பிரியா,
கால்நடை உதவி மருத்துவர்,
எண்கண்,
திருவாரூர் மாவட்டம்.




// Image Credit: Wikimedia Commons
Under CC //

Sunday, 9 October 2022

அன்னையும் பிதாவும் - அன்பின் வழி

ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு,  

" ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!

"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!! 
"மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!

சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!! 

அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ,

 "ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....? 

உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!!

 ஆனால் ,
  "என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.

கவலைப்படாதே ....!!

இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று,

" கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!

என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!

அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!

மறுபடியும் அவன் வரவேயில்லை....!!
 

மரம் அவனுக்காக ஏங்கியது....!!

 பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!!

 அவன் முகத்தில் கவலை தெரிந்தது,

 இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!!

 அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். 

"வா என்னிடம் வந்து விளையாடு"...!!

 "இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!

அதற்கு அவன்_
  இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!

எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,

ஆனால் ,
  "நாங்கள் வசிக்க சொந்தமாக 
நல்ல வீடு இல்லை"....!! 

"வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!

மரம் உடனே சொன்னது ,

 பரவாயில்லை ....
  "உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!

அதற்கு பதில்,
  " என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!

"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!!

 "இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!

முடிந்த வரை,
  " வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!! 

அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!! 

அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!

பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!

மரம் அவனை பார்த்து,
   " ஆனந்த கூத்தாடியது"......!!!

அவன் எப்போதும் போல் ,
    'சோகமாக இருந்தான்'.....!!

"ஏன் இப்படி இருக்கிறாய்",
        என்று மரம் கேட்டது.....!! 

"என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"....,

 "படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!

"அதனால் வருமானம் இல்லை"

 "நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!

மரம் துடித்து போனது,.....!!

" நான் இருக்கிறேன்".....!!

  "என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!

"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!

அவன் அடி மரத்தை வெட்டும் போது....,

 மறக்காதே....!!

வருடத்திற்கு ஒரு முறை 
என்றில்லாமல் ......,

"எப்போதாவது 
என்னை பார்க்க வா".. என்றது....!!

ஆனால் அவன் வரவேயில்லை.....!!

 மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!

அப்போது அவன் வந்தான்.....!!!

 'தலையெல்லாம் நரைத்து' ,
 'கூன் விழுந்து' ,
 'மிகவும் வயதான தோற்றத்துடன்'... ,
 அவன் இருந்தான்.....!!

"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!

"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!

"கிளைகள் இல்லை"........!!!

"அடி மரமும் இல்லை".........!!

 உனக்கு கொடுக்க,
 "என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!

அவன் சொன்னான் ,

நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' ,

 அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!!

 வீடு கட்டவும் ,
படகு செய்யவும் 
என்னிடம் சக்தி இல்லை....!!

 "எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!

அப்படியா....!!!

 இதோ....,
   " தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!!

 "அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!

இந்த சுகத்துக்கு தான்......

 "அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!

"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!!

 "அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!

"இது மரத்தின் கதையல்ல"....!!

 " நம் பெற்றோர்களின் கதை"....!!

 இந்த சிறுவனை போல் ,

"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!!

 வளர்ந்து பெரியவனானதும்...,

 தமக்கென்று குடும்பம்,
 குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். 

அதன் பின் ,

"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!

"நம்மிடம் இருப்பவை எல்லாம்",

  " அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"🌳 

  "நம்மால் அவர்களுக்கு எதுவும் 
கொடுக்க முடியாது"🌳 

   "நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர"🌳 

"அவர்கள் விரும்புவதும் அதைதான்"🌳

- Thanks for Reading

// Credits: content: Facebook
Image : Wikipedia//

Saturday, 8 October 2022

ஆசிரியரின் "அடி"

ஆசிரியரின் "அடி"



*ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..*
 சிகரெட் பிடிக்கப் பழகினான்...

பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.

அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...

 *பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.*

இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்...

கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,...

இறுதியாக..
 *தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.* அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..

தூக்கிற்கு முன்தினம் *கடைசி ஆசை கேட்கப்பட்டது.*

பெற்றோரை சந்திக்க விரும்பினான்.

பெற்றோரும் வந்தனர்.

கதறினர்.....
*போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,*

மகன் அமைதியாகச் சொன்னான். *அவர்கள் காரணமில்லை,...*

 *நீங்கள்தான்* " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது *ஆசிரியர்* என்னை கண்டித்து அடித்தார்.

வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து *ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....*

 *அடித்து மிரட்டி..* போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் ..... *தூக்கு மேடை வரை வந்திருக்கிறது*

*எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..*

ஆசிரியர் *கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.*

இதை பெற்றோர் உணரவேண்டும்.

சிந்திக்க வைத்த பதிவு...

*பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.


- Thanks for Reading - Share with your friends 


//Credits:
Image : Internet
Content: Facebook//

ஒரு நிமிட கதை - நகைச்சுவை நேரம்

போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...

முதல் நாள் :

எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control பண்றதை விட.,

மனசை Control பண்றது கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது

வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..

இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..

ஆனா அந்த கார்...

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,

Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,

பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..

மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..

அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..

ஆனா எங்க குருவோ..,

" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "

அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..

அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..

அப்ப குரு பார்த்துட்டார்

என்ன கேட்டேனா.. ?

" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?

நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "

இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😄🙄😄🙄😄🙄

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....