Wednesday 12 October 2022

வாழ்க்கையே இனி நற்திசையாகும்

வாழ்க்கையே இனி நற்திசையாகும்

பெரும்பாலோரின் மனதிற்குள் ஒரு மிருகக்குணம் 24 மணி நேரமும் விழித்துக் கொண்டே இருக்கிறது.

 வாய்ப்பு வருகிற போது தன் குணத்தை காட்டுகிறது.  அப்படிப்பட்ட குணத்தோடு ஒருவன் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தான். அவன் பிரச்சனை மிக எளிதானது, 
 யாரும் தனக்கு நம்பிக்கையானவர்களாக இல்லை எல்லோரும் தனக்கு மட்டும் தேடி வந்து துரோகம் செய்வதாக எண்ணினான். அப்படிப்பட்ட துரோகிகளை பழிக்குப் பழி வாங்காவிட்டால் தன்னை மிகவும் தகுதி குறைவாக உலகம் எடை போடும் என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டான்.

பிறரின் சின்ன சின்ன காரியங்களை கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கினான்.

 வார்த்தைகளால் பிறரை பதம் பார்த்தான் உறவு கூட்டம் உதறியெறிய நண்பர் கூட்டம் தூர விலக்கியது.
 யாரையேனும் சபித்துக் கொண்டே இருந்தான் எல்லோரும் தன்னையும் சபிப்பதாக எண்ணினான்.

மனம் குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் காப்பாற்ற வருகிற துருப்பு கூட மரணத்தின் முகவரியை பெற்றிருப்பதாகவே என்ன தோன்றும் ! அப்படித்தான் அவனையும் அந்த விஷக்கொடி பற்றிப் படர்ந்து மன அமைதி கெடுத்தது.

கவலைகளை சேமித்து வைக்கிற குப்பைத்தொட்டியாக அவனும் அவன் மனதும் மாறின.

அவனை ஒரு துறவியிடம் அழைத்துச் சென்றனர் ;
எந்த மருந்தும் இல்லாமல் மூன்று நாட்களில் வியாதி குணமடையும் என துறவி கூற , அவனின் குணம் தலைதோக்கியது .

தன்னிடமிருந்து பொருளை பிடுங்கத் துறவி போடுகிற வேடம் என்று பிதற்றினான்.

எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம்....

 நீ திரும்புகிற போது நானே உனக்கு பணம் தருகிறேன்....

ஒரே ஒரு நிபந்தனை உண்டு என்றார்...! துறவி.

'என்ன ? வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்... அதுதானே ?  " 
என்றான் இளக்காரமாக ...

" நீ யாரையும் நம்பாமல் இருக்க காரணம் எத்தனையோ இருக்கலாம் ....

அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை ...

உனக்கு மூணு நாட்கள் மட்டுமே இங்கு வேலை தரப்படும் முடிவில் நோய் நோய் குணமாகும் .

நோய் குணமாக விட்டால் பணமாவது வரவாகும் என்ன சொல்கிறாய் ?

 மனதிற்குள் கருதிக்கொண்டான் " தன்னை வஞ்சித்து பின் அசம்பாவிதம் ஏதும் இருந்தால் முதலில் கொளுத்த வேண்டியது இந்த துறவியைத்தான்..." 

முதல் நாள்,
வேலைகளை பல்வேறு சீடர்களுக்கு பகிர்ந்து அளித்தார் அவனுக்கு கூரை வேயும் பணியை மட்டுமே அளித்தார்.

 ஒரு நாள் ஒரு பொட்டலத்தை வழங்கி இதில் பாதியை சாப்பிட்டுவிட்டு மீதியை நான் கேட்கிற பொழுது கொடு என்றால் முதல் நாள் வாங்கவில்லை...

 இரண்டாவது நாள் உணவுப் பொட்டலத்திலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது..

 துறவி அதை பற்றி கேட்கவே இல்லை..

இதை வைத்திருக்க வேண்டுமா ? 
என யோசித்தான்.

மூன்றாவது நாள் துறவியின் முற்றம் கூடியது..  அவனிடம் " எங்கே உணவுப் பொட்டலம் ? என்றார்..."

 அவனும் அதற்கு...

 அது ..... அது.... எப்படி வைத்திருக்க முடியும் ...?

அதை அப்பொழுதே தூக்கி எறிந்து விட்டேன் என்றான்...

"இப்போது புரிந்ததா கவலைகளும்,  குழப்பங்களும் அன்றன்றைக்கே தூக்கி எறியப்பட வேண்டியவை....
 சேர்த்து வைத்தால் வியாதிகளின் விளைச்சல் நிலம் ஆகி விடுவோம் நாம்.."

 என்றால் துறவி..

 அவர் தந்த விளக்கம் சிறியதுதான். ஆனால் சிந்திக்க வேண்டியது..

 மூன்றாவது நாள் வெளியேறியவனுக்கு புது திசை காத்திருந்தது

"கவலைகள் பறவைகளை போன்றது அவை உங்களுக்குள் கூடு கட்டும் முன், அவைகளை உங்களைத் தாண்டி பறக்க அனுமதியுங்கள் ! ! ! "

- மரு.ஜ.கோகிலப்பிரியா,
கால்நடை உதவி மருத்துவர்,
எண்கண்,
திருவாரூர் மாவட்டம்.




// Image Credit: Wikimedia Commons
Under CC //

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...