சாதிக்க நினைப்பவர்களுக்கு
எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள்
1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை விட சிறந்த நண்பனில்லை ....
2. உடலுழைப்பை அதிகரி .... அது மட்டுமே உன்னை உயர்த்தும் , ஆனந்தமும் ஆரோக்கியமும் அதில் மட்டுமே கிடைக்கும் ..
3. குளிர்ந்த நீரில் குளி . உடல் சுறுசுறுப்பாகும் ...
4. தியானம் கைக்கொள்.... உன்னை நீ உணர்ந்து கொள்ள அது மட்டுமே வழி காட்டும் ....
5. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட .... உன் தூக்கம் இன்பமாக இருக்கும் ...
6. தாய் தந்தையைப் போற்றி வணங்கு ..... அது உன் கடமை.
7. உணவில் கீரை சேர்த்துக் கொள் ....
8. எத்தனை வலித்தாலும் அழாதே . சிரி . வலிமைக்குக் மேல் வலிமை பெற்று வானம் தொடுவாய் ....
9. ஆத்திரம் அகற்று .
எதற்கும் கோபப்படாதே ....
கோபம் உன்னை ஒரேயடியாக அழித்து விடும் ....
10. கேலிக்கு புன்னகையை பரிசாக்கு ...
11. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு . திருப்பித் தாக்கி விடாதே ....
12. நட்புக்கு நட்பு செய் .
பகைவனைக் கூட நேசிக்கப் பழகு .....
13. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு ....
மேலும் மேலும் உயர்வாய் ...
14. அலட்சியப்படுத்தினால் விலகி நில் . ஆத்திரப்பட்டுவிடாதே ....
15.. அன்பு செய்தால் நன்றி சொல் .... நன்றியுணர்வு உன்னைப் பெரியவனாக்கும் ...
16. இதமாகப் பேசு .
இனிமைகள் உன்னை அரவணைத்துக் கொள்ளும் ....
17 . நீயும் நானும் எதைச் செய்தாலும் இறைவன் மௌனமாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் .....அவருக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் .... ஆகவே நல்லதைச் செய் .....
நீ ஜெயிப்பாய்.... நிச்சயமாக ஜெயிப்பாய் ..
வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய்.
நன்றி
________
Sathiskumar Education
_____________
Data : Collected from Various places and Internet
No comments:
Post a Comment