Sunday, 1 November 2020

வாழ்க்கை வாழ்வதற்கே

அனைவருக்கும் வணக்கம் ,

வாழ்க்கை வாழ்வதற்கே...

உண்மைதான் வாழ்க்கையில் என்ன ஆனாலும் நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அதனை முறித்துக் கொள்ளும் உரிமை நமக்கு இயற்கையில் கிடையாது , அது மிகவும் கோழைத்தனமானதும் தவறானதும் கூட, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடியலும் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற ஒரு நோக்கத்துடனேயே ஒவ்வொருவரின் நாட்களும் தொடங்குகின்றன அவ்வாறே அந்த நாட்கள் முடியும் என்பதில் சந்தேகமே...

இருப்பினும் நாம் அந்த நாளை வாழ்ந்துதான் ஆகவேண்டும் அடுத்த ஒரு விடியலுக்காக காத்து தான் இருக்க வேண்டும் இவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் மாறி மாறி தந்து கொண்டுதான் இருக்கிறது இவ்வாறாக உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அன்றைய நிகழ்வுகளை அப்போது ரசித்துவிட்டு அந்த நொடிப்பொழுதில் இன்பமாக இருக்க பழகுங்கள் அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் செல்வம் தேவைதான் ஆனால் அது மட்டுமே நிலையான போதுமான ஒன்று கிடையாது...

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் இப்படிக்கு ,

அன்புடன்
சதீஷ்குமார்,
Sathiskumar Education.

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....