Thursday, 14 February 2019

கண்ணம்மா என் காதலி

பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு 
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு 
வாயுரைக்க வருகுவதில்லை
வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...
வீணையடி நீ எனக்கு
மேவும் விறல் நானுனக்கு 
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி 
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...
வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....
வெண்ணிலவு நீ எனக்கு
மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு
பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....
வீசுகமழ் நீ எனக்கு
விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு
பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே
நின்னழகாய் எத்துறைப்பேன் 
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....
காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு
விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கிவரும் தீஞ்சுவையே நாதவடிவானவளே நல்ல உயிரே  கண்ணம்மா....
நல்லவுயிர் நீ எனக்கு
நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு
சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே
எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை
மோதுமின்பமே கண்ணம்மா...
தாரையாடி நீ  எனக்கு
தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு
தரணியில்  வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
-மகாகவி பாரதியார்...

10th Maths - Chapter -3 - Algebra - Exercise 3.20 - Q.No: 11

If the roots of the equation  q 2 x 2 + p 2 x + r2 = 0  are the squares of the roots of the equation  q x 2 + p x + r = 0 , are the squares ...