அ - அழகு , சுட்டெழுத்து, எட்டு.
ஆ - பசு , ஆன்மா, ஆச்சா மரம்.
ஈ - கொடு , அம்பு, பறக்கும் பூச்சி.
உ - சிவன், இரண்டு, ஆச்சரியம்.
ஊ - இறைச்சி, உணவு.
எ - வினா எழுத்து, ஏழு.
ஏ - அம்பு, இறுமாப்பு, வினாப்பெருக்கம்.
ஐ - அழகு, தலைவன், கடவுள், ஐந்து.
ஒ - நிகர், பொருந்து.
ஓ - வியப்பு, மதகு நீர் தாங்கும் பலகை, மகிழ்ச்சி.
ஔ - உலகம், ஆனந்தம்.
க - ஒன்று, நெருப்பு, நான்முகன்.
கா - சோலை , காவல் , காவடி.
கு - குற்றம்.
கூ - பூமி, கூகை.
கை - ஒழுக்கம், கரம்.
கொ - கொள்ளு.
கோ - அரசன் , இறைவன்.
கி - இறைச்சல், ஒலி.
சா - இறந்து போன.
சீ - அலட்சியம், இகழ்ச்சி, கிளறு, ஒளி.
சே - உயர்வு, சிவப்பு, மரவகை.
சை - இகழ்ச்சி.
சோ - சுவர், அரண், மதில்.
ஞா - சுட்டு, பொருந்து.
ஞை - இகழ்ச்சி.
த - பிரம்மா, குபேரன்.
தா - கொடு, அழிவு.
தீ - நெருப்பு, இனிமை.
து - உண், துன்பம்.
தூ - தூய்மை, வெண்மை.
தே - தெய்வம், கடவுள், அருள்.
தை - திங்கள், மாதம், தைத்தல்.
ந - சிறப்பு, மிகுதி.
நா - நாக்கு, அயலார்.
நீ - முன்னிலைப் பெயர், முன்னிலை ஒருமை.
நு - தோணி, புகழ், நேரம்.
நூ - யானை, அணிகலன், எள்.
நே - அன்பு, அருள்.
நை - இழிவு, வருந்து, இகழ்ச்சிக்குறிப்பு.
நொ - நோய், துக்கம்.
நோ - வறுமை, துன்பம், நோகுதல்.
ப - பஞ்சமம் (இசை ஒலி) , காற்று.
பா - பண், பாட்டு.
பி - அழகு.
பூ - மலர், புவி.
பே - மேகம், நுரை.
பை - இளமை, பசுமை, கொள்கலம்.
போ - செல், போதல்.
ம - காலம், சந்திரன்.
மா - மாமரம், பெரிய, விலங்கு.
மீ - வான், மேலே, உயர்வு.
மூ - மூப்பு, மூன்று.
மே - அன்பு, மேன்மை, உயர்வு.
மை - அஞ்சனம், எழுதுமை, குற்றம், இருள், கருமை.
மோ - மோத்தல்.
யா - அகலம், ஐயம்.
வா - அழைத்தல், வருக.
வீ - மலர், பூ, விரும்புதல்.
வை - புல், வைக்கோல், வைத்தல்.
வௌ - கவர், கைப்பற்றுதல், ஒலிக்குறிப்பு.
(வீடியோ பார்க்க - Watch Video)
By
S.Sathiskumar M Sc., B.Ed.,
Sathiskumar Education - YouTube Channel